முன்னுதாரணமான மலையகக் கட்சியின் நியமனங்கள்; தமிழ் தலைவர்கள் கற்க வேண்டிய விடயம்!

jeevan thonda
jeevan thonda

இளைய தலைவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் அதிரடியை அரசியல் செயற்பாட்டாளர்களும் இளைய தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 

அத்துடன் இந்த விடயத்தில் குறித்த மலையக கட்சியிடமிருந்து வடக்கு கிழக்கு தமிழ் தலைவர்கள் பாடங்களைக் காற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அண்மையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் காலமாகியிருந்தார். இதனையடுத்து கட்சி நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், கட்சியின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் கூட்டம் இன்று, கொட்டகலை சீல்.எல்.எப்.கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது இரண்டு இளையவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கட்சியின் பிரதித் தலைவராக அனுசியா சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

வடக்கு கிழக்கில் வயது முதிர்ந்த நிலையிலும் பதவி ஆசையில் கட்சியின் பதவிகளில் நிரந்தரமாக அமர்ந்திருக்கும் தலைவர்கள் இதுபோன்ற விடயங்களில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.