ஊடக அடையாள அட்டை விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை இன்றுடன் நிறைவு

1592619209 Media ID 3

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்காக வருடாந்தம் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டைகளை வழங்கும் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சிக்கு வழங்குவதற்கான எந்தவித பரிந்துரையும் முன்வைக்கப்படவில்லையென்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்தார்

2020 ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக 4,337 விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதுடன் அவற்றுள் சுமார் 3,500 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

அரச தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை தொடர்பாக அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சநதிப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடக அடையாள அட்டை தகவல் திணைக்களத்தினால் மாத்திரம் விநியோகிக்கப்படுகின்றது அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இந்த அடையாள அட்டை வழங்கப்படுகின்றது என்றும் கூறினார்.

இந்த அடையாள அட்டைக்கு நம்பிக்கை மற்றும் ஏற்றுக் கொள்ளும் தன்மையிருப்பதைப் போன்று இந்த அடையாள அட்டையை கொண்டுள்ளவர்கள் தொழில் ரீதியிலான ஊடகவியலாளராக அரசாங்கத்தினால் விசேடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகும்.

இந்த அடையாள அட்டையை விநியோகிக்கும் அதிகாரத்தைக்கொண்டுள்ள அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் இந்த அடையாள அட்டை வழங்கப்படுவது ஊடகவியலாளர் தொழில் ரீதியில் ஈடுபட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரேயாகும். என்றும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றின் காரணமாக விண்ணப்பங்கள் திணைக்களத்திற்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்த அவர், இதற்கமைவாக 2020 ஜுன் மாதம் 20ஆம் திகதி வரையில் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டிருப்பதாகவும், 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்குள் இந்த வருடத்திற்கான அடையாள அட்டையை விநியோகிக்கும் பணியை பூர்த்தி செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டை 2020ஆம் ஆண்டில் ஜுலை மாதம் 15ஆம் திகதிவரையில் செல்லுபடியாகும் பதிவுசெய்யப்பட்ட செய்தி இணையதளங்களுடன் தொடர்புபட்ட ஊடகவியலாளர்களுக்கு அடையாள அட்டையை வழங்கும் பொழுது சில பிரச்சினைகள் இருப்பதாகவும் இந்த செய்தி இணையதளங்கள் பொறுப்புடன் செயல்படுவதாக உறுதிசெய்யப்பட்டப் பின்னர் அவர்களுக்கான ஊடக அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ மேலும் தெரிவித்தார்.