கொரோனாவுடன் இன்றும் எவரும் அடையாளம் காணப்படவில்லை!

unnamed file 12
unnamed file 12

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் இன்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இதேவேளை, மேலும் (26) பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் இன்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை (1,950) ஆகக் காணப்படுகின்றது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை (1,498) ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றும் கொரோனாத் தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை. இறுதியாக கடந்த ஏப்ரல் (16)ஆம் திகதியும்
(65 நாட்களுக்கு முன்னர்) இவ்வாறு எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான (938) பேர் அடங்குகின்றனர். இதில் (901) பேர் கடற்படையினராவர். குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை (773) ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, வெளிநாட்டுப் பிரஜைகள் (08) பேர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த (699) பேர் இதுவரை கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்ட (1,950) பேரில் தற்போது (441) நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் (11) பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் (25) பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.