பொதுப் போக்குவரத்துக்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் திடீர் சோதனை

DSC03672

சுகாதார அமைச்சால் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த 22ஆம் திகதி தொடக்கம் தேசிய ரீதியிலான கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் முகக் கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளிகளைப் பேணி போக்குவரத்தில் ஈடுபடுகின்றனரா என்று நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தேசிய ரீதியான இந்தச் செயற்திட்டம் வடக்கு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டது. நகரின் பிரதான வீதிகளில் பயணம் செய்த பேருந்துகள் மறிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. பெரும்பாலான பேருந்துகளில் முகக் கவசம் அணியாமலும், உரிய சமூக இடைவெளி இன்றியும் அதிகளவான பயணிகள் ஏற்றப்பட்டமை அவதானிக்கப்பட்டது. பேருந்தின் நடத்துனர்கள், சாரதிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

விழிப்புணர்வு வாரத்தில் கடந்த 22ஆம் திகதி அனைத்து சந்தைகளிலும், 23 ஆம் திகதி உற்சவங்கள் நடைபெறும் ஆலயங்களிலும், 24 ஆம் திகதி அரச, தனியார் அலுவலகங்களிலும் நேற்று பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

நேற்று அனைத்து திருமண மண்டபங்களிலும், இன்று அனைத்து உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் ஆகியவற்றிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.