இராணுவ தலைமையகத்தில் புதிய எரிபொருள் நிரப்பும் நிலையம் திறப்பு

1593135605 maofficefuel 2

ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் புதிய எரிபொருள் நிரப்பும் நிலையம் நேற்று (25) காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கொவிட் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வருகை தந்து ரிபன் வெட்டி பெயர் பலகையை திறந்து வைத்தார்.

பின்னர் இராணுவ தளபதி எரிபொருள் நிரப்பு நிலைய அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை சுற்றி பார்வையிட்டார்.

இராணுவ தளபதியவர்கள் இந்த நிலையத்தில் ஆரம்ப எரிபொருள் நிரப்பும் முகமாக தனது சொந்த வாகனத்திற்கு எரிபொருளை தனது கரங்களினால் செயற்படுத்தி ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து இராணுவ தளபதியவர்கள் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் படையினருடன் உரையாடி அவர்களுக்கு சில கருத்துக்களையும் முன்வைத்தார்.

இராணுவத் தலைமையகத்தின் முக்கிய திட்டத்தின் கீழ் புதிய நிரப்பு நிலையம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மேற்பார்வையில் 36 மில்லியன் ரூபாய் செலவில் லெப்டினன்ட் கேணல் நாரத வனசிங்கவின் தலைமையில் 8 ஆவது இராணுவ பொறியியல் சேவைப் படையணியினால் நிர்மானிக்கப்பட்டது.

இராணுவத் தலைமையகத்தின் திட்ட முகாமைத்துவ பிரிவு பாதுகாப்பு தலைமையகத்தின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரோஹான் பதிராஜா, இராணுவத்தின் சார்பாக திட்டத்தை ஒருங்கிணைத்து முடித்து வைத்தார்.

இந்த எரிபொருள் நிரப்பும் நிலையம் வழங்கல் மற்றும் போக்குவரத்து பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஹிரோஷ வணிகசேகர அவர்களது மேற்பார்வையில் இலங்கை இராணுவ சேவைப் படையணியினால் பராமரிக்கப்படும்.

இந்த நிகழ்வில் இராணுவ மூத்த அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.