சினிமா திரையரங்குகள் மீண்டும் திறப்பு

thee
thee

நாடளாவிய ரீதியில்  கொரோனாவால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மூன்று மாதங்களாக  மூடப்பட்டிருந்த சினிமா திரையரங்குகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.

கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் மீண்டும் திறக்க சினிமா திரையரங்க உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகாரங்கள் அமைச்சின்  செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

அனைத்து சினிமா திரையரங்குகளும் திறப்பதற்கு முன்பு கிருமி தொற்று நீக்கம் செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்கினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை அனைத்து பார்வையார்களும் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் கொரோனா பரவலை தடுக்க மார்ச் மாதம் 14 ஆம் திகதி அனைத்து சினிமா திரையரங்குகளும் மூடப்பட்ட நிலையில் இன்றும் மீண்டும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.