கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் வித்தியாசமான பிரச்சார உத்தி!

104431811 1678468752307301 8574298859982730960 n 1

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் வித்தியாசமான பிரச்சார உத்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலக்கம் 5 இல் களமிறங்கியுள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

104493500 1678468702307306 628761858879811062 n

பொதுத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் மேற்கொள்வதில் பல வேட்பாளர்கள் திண்டாடிப் போயுள்ளனர். பெரிய பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ள நிலையில், தனது பிரதேசத்தில் லிங்கநாதன் வித்தியாசமான உத்தியை கையாள்கிறார்.

104958921 1678468735640636 7325725525770132101 n

நெடுங்கேணி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் விற்கப்படும் குளிர்பான வகைகள் உள்ளிட்ட பல உணவுப்பொதிகளில் தனது ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

குளிர்பான போத்தல்கள், மற்றும் பானங்களில் லிங்கநாதனின் படம் பொறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.