நாட்டின் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்!

0000
0000

மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று அல்லது நாளை மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களை, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.