மார்ச், ஏப்ரல், மே மாதங்களின் மின் கட்டணத்தில் சலுகைகள்!

electricity1 30 1496132715 1586801633
electricity1 30 1496132715 1586801633
  • அரசு அதிரடித் தீர்மானம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மின் பாவனையாளர்களின் நலன் கருதி கடந்த மார்ச், ஏப்ரல், மே மாத மின் கட்டண அறவீடுகளின் போது சலுகைகளை வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

அது தொடர்பாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-

“அமைச்சரவையில் இத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர அது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

அதற்கிணங்க மக்களுக்கு சலுகை வழங்கக் கூடிய முறைமை தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரிடம் வினாவியுள்ளார்.

அது தொடர்பில் தெளிவுபடுத்திய அமைச்சர், சலுகை வழங்குவது தொடர்பில் பரிந்துரை செய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும், மேற்படி குழு சமர்ப்பிக்கும் யோசனையை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து அதையடுத்து சலுகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் குறிப்பிட்ட மூன்று மாத காலத்தில் மின்கட்டணம் செலுத்தப்படாத நிலையில் மின்சார சபைக்கு (20) பில்லியன் ரூபா அறவிடப்பட வேண்டியுள்ளது” – என குரிப்பிட்டுள்ளார்.