மாணவர்களை உற்சாகப்படுத்த ’நல்ல பிள்ளை’விருது; ஒரு வித்தியாச முயற்சி!

shan sir
shan sir

சக்தி கலாசார அபிவிருத்தி மன்றத்தின் 18வது ஆண்டு நிறைவு வைபவம் அரியாலையிலுள்ள மன்ற வளாகத்தில் எளிமையானமுறையில் அண்மையில் கொண்டாடப்பட்டது.

shan sir 01
shan sir 01

கல்வியிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் சாதனைகளை ஈட்டிய யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனான செல்வன் ரைற்றஸ் துகிஷ் அவர்களுக்கு, இவ்வாண்டுக்கான ’நல்ல பிள்ளை’ விருதினை, முதன்மை விருந்தினர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன் தம்பதியினர் வழங்கிக் கௌரவித்தனர்.

ஏனைய விருந்தினர்களான, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி கு.கேதீச்வரன்,சுடர் நிலா புத்தகசாலை உரிமையாளர் திரு த.தனதீசன் ஆகியோருடன் மன்ற நிறுவுனரான திரு. மதிகரன், மற்றும் ’நல்ல பிள்ளை’ விருதாளரின் பெற்றோர்களையும் விருதுபெற்ற செல்வன் துகிஷ் உரையாற்றுவதனையும் படங்களில் காணலாம்.