சுமந்திரனின் நீலச் சேட்டால் கஜேந்திரகுமார் எடுத்த அதிரடி முடிவு(அரசியல் நகைச்சுவை)

56 n
56 n

யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக் கழக மாணவர்களால் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்த கஜேந்திரகுமார் பல தரப்பினரின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். கஜேந்திரகுமாரின் இச்செயற்பாடு தொடர்பாக முகநூலில் தமிழ்ப்பொடியனால் (சபாரத்தினம் விமலேஸ்வரன்) எழுதப்பட்ட நகைச்சுவையான விமர்சனத்தைக் கீழ்க்காணலாம்.

#கஜேந்திரகுமார்: இடைக்கால வரைபை நிராகரிக்கிறம்

#கம்பஸ்பொடியள்: ஓம் நிராகரிப்பம்.

#கஜேந்திரகுமார்: ஒற்றையாட்சி வேண்டாம்.

#கம்பஸ்பொடியள்: சரி வேண்டாம்

#கஜேந்திரகுமார்: தேசம் அங்கீகரிக்கப்பட வேணும்

#கம்பஸ்பொடியள்:சரி அதையும் சேர்ப்பம்

#கஜேந்திரகுமார்: சுயநிர்ணய உரிமை?

#கம்பஸ்பொடியள்: சரி அதையும் போடுவம்.

#கஜேந்திரகுமார்:சமஸ்டி?

#கம்பஸ்பொடியள்: கட்டாயம் அதையும் சேர்ப்பம்

(கஜேந்திரன் கஜேந்திரகுமாரின் காதில் ஏதோ குசுகுசுக்கிறார்)

#கஜேந்திரகுமார்:சர்வதேச விசாரணை வேணும்

#கம்பஸ்பொடியள்: ஓமோம் அது கட்டாயம் வேணும்.

#கஜேந்திரகுமார்:பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கவேணும்.

#கம்பஸ்பொடியள்: பின்ன கட்டாயம் அது முக்கியம்.

#கஜேந்திரகுமார்:அரசியல் கைதிகளின் விடுதலை என்ன மாதிரி

#கம்பஸ்பொடியள்: அது எல்லாம் இருக்கு இந்த அறிக்கையில்…

#கஜேந்திரகுமார்:காணிவிடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்ட ஆக்களின் பிரச்சினை?

#கம்பஸ்பொடியள்: எல்லாம் இருக்கு அண்ணை!

#கஜேந்திரகுமார்: வேற என்ன இருக்கு?

#கம்பஸ்பொடியள்:பெளத்த மயமாக்கல்,சிங்களமயமாக்கல்,அத்துமீறிய சிங்கள குடியேற்றம்

#கஜேந்திரன்: வேற….

#கம்பஸ்பொடியள்: அரச நிலங்கள் என்ற போர்வையில் தமிழர் தாயகத்தில் திட்ட மிட்ட நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்படவேணும்.

வடக்கு கிழக்குக்கு வேலைவாய்ப்பு முக்கியத்துவம் குடுத்து எங்கட சனத்துக்கு முன்னுரிமை

வடக்கு கிழக்கு போரால் பாதிக்கப்பட்ட சிறப்பு பிரதேசமா அங்கிகரிச்சு மீழ் கட்டுமானத்துக்கு அதிகமான நிதியும் கையாளும் அதிகாரமும் எங்களுக்கு வேணும்.

#கஜேந்திரகுமார்: இன்னும் இருக்கோ .

#கம்பஸ்பொடியள்: இதில முக்கியமான ஒரு 10 கோரிக்கைகளை தான் இணைச்சிருக்கிறம். ஆனால் பேரம் பேசும் போது விளக்கமா கதைப்பம்.

(கஜேந்திரன் மீண்டும் கஜேந்திரகுமாரின் காதில் குசுகிசுக்கிறார்)

(“எல்லாத்துக்கும் ஓம் எண்டுறாங்கள் எதாவது ஒரு காரணத்தை சொல்லி குழப்பு அண்ணை”)

(சுகாசும் மணிவண்ணனும் தலையை குனிஞ்சு கொண்டு நிக்கினம்)

#கம்பஸ்பொடியள்: எல்லாருக்கும் ஒகே தானே! தயவுசெய்து எல்லாரும் இந்த ஆவணத்தில கையெழுத்து வையுங்கோ. மேற்கொண்டு முன்னேறுவம்.

(எல்லா கட்சிகளும் கையெழுத்து வைக்கின்றன. கஜேந்திரகுமார் வைக்கவில்லை)

#கம்பஸ்பொடியள்: கஜேந்திரகுமார் அண்ணை கையெழுத்தை வையுங்கோவன். நீங்கள் முன்வைச்ச கோரிக்கைகளை விட மேலதிகமாகவும் பல கோரிக்கைகளை இணைச்சிருக்கிறம். பிறகேன் தயக்கம்?

#கஜேந்திரகுமார்: இடைக்கால வரைபில சமஸ்டி இல்லை.ஒற்றையாட்சி இருக்கெண்டு சுமந்திரன் ஒத்துக்கொள்வாரா?

#கம்பஸ்பொடியள்: அண்ணை அதை ஒத்துக்கொண்டுதானே இந்த ஆவணத்தில் கையெழுத்து வைக்கினம்.

சரி நீங்கள் கையெழுத்தை வையுங்கோ.

#கஜேந்திரகுமார்: இல்லை வைக்கேலாது.

#கம்பஸ்பொடியள்: என்னண்ணை உங்கட பிரச்சினை?

#கஜேந்திரகுமார்: சுமந்திரன் நீலச்சேட்டோடை வந்திருக்கிறார்.

#கம்பஸ்பொடியள்: அண்ணை அவர் நீலச்சேட்டோட வந்ததுக்கும் நீங்கள் கையெழுத்து வைக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்? விசர்க்கதை கதையாதையுங்கோ

#கஜேந்திரகுமார்:

கடைசியில UNP சஜித்துக்கு தான் ஆதரவு எண்டு “சிம்பொலிக்கா” சொல்லுறார்.

#கம்பஸ்பொடியள்:

அண்ணை விசர்க்கதை கதைக்காமல் ஆள் போறியளா?

#கஜேந்திரகுமார்:

எனக்கு தெரியும். துரோகிகளோட சேரும் போதே நீங்களும் துரோகிகள் தான்.

#கம்பஸ்பொடியள்:

அண்ணை சனத்துக்கு தெரியும் நாங்கள் ஆரெண்டு!

ஆள் மாறுங்கோ நீங்கள்….!

#திரு_பொதுசனம்