வாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்!

tamilnadu voters count consolidated tamil south india voice

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று (11) முதல் ஆரம்பமாகவுள்ளன.

இந்த நடவடிக்கை இன்றும், நாளையும் மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளளன.

உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இந்த மாதம் 29 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

குறித்த நாளுக்கு முன்னர் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் குறிப்பிட்ட தபால் நிலையங்களுக்கு சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 14 ஆம், 15 ஆம் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

அரச ஊழியர்களுக்கு 14 ஆம் 15 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.

அதேபோல், மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் செயலகம், பொலிஸார், இராணுவம், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கு தபால் மூலம் வாக்களிக்க எதிர்வரும் 16 ஆம், 17 ஆம் திகதிகளில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த தினங்களில் தபால்மூலம் வாக்களிக்க தவறுவோர் எதிர்வரும் 20 ஆம் 21 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது