மூன்று மாதங்கள் ஜனாதிபதி தூக்கத்தில் இருந்தாரா? – மனோ கேள்வி

mano ganesan 1
mano ganesan 1

கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டுமென தற்போது கூறும் ஜனாதிபதி மூன்று மாதங்கள் தூக்கத்தில் இருந்தாரா என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான நிலை குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாட்டில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டுமெனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த பதிவில் “கொரொனா பரிசோதனைகளை அதிகரியுங்கள் என இன்று ஜனாதிபதி கூறுகிறார். இவரென்ன மூன்று மாத உறக்கத்தில் இருந்து இன்றுதான் விழித்தாரா? கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இந்நாட்டில் 40,000 பேர் இருக்கிறார்கள்.

அவர்களை கண்டறிய உடன் பரிசோதனைகளை அதிகரியுங்கள் என மூன்று மாதங்களுக்கு முன்னரே சொன்னேன். அப்போது மனோ பொய் சொல்கிறார். அவரை கைது செய்யுங்கள் என ஒரு தேரர் உட்பட பலர் கத்தினார்கள். இப்போதாவது, அதை செய்யுங்கள். இரண்டாம் அலை அடிக்க முன் அதை செய்யுங்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.