இனவாத பாடநெறிகள் மத்ரசா கல்வி நிலையங்களில் கற்று கொடுக்கப்பட்டுள்ளது!

acf cropped 1
acf cropped 1

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் சாஹ்ரான் ஹசீமை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை தொடர்பில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவிக்காமை குற்றமான செயல் என்பதனை பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதி காவல் துறை மா அதிபர் நாலக டி சில்வா ஒப்புக்கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை ஒப்புக்கொண்டுள்ளார்.

இவர் இரண்டாவது முறையாக குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அவர் தெரிவித்ததாவது கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2015 அம் அண்டு வரையான காலப்பகுதிக்குள் மத்ரசா கல்வி நிலையங்களில் இனவாத ரீதியான பாடநெறிகள் கற்றுக்கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

குறித்த கல்வி நிலையங்களில் சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்தவர்களே இவ்வாறான பாடநெறிகளை கற்றுக்கொடுத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.