தபால் மூல வாக்களிப்பின் ஐந்தாம் நாள் இன்று

Ballot paper poll 1

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் ஐந்தாம் நாள் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

705,085 வாக்காளர்கள் இம்முறை பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கினை அளிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்புப் படைகள், சிவில் பாதுகாப்புத் துறை, சுகாதார சேவைகள் துறை, அனைத்து மாவட்ட செயலக அலுவலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் இன்று தபால் வாக்குப்பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

மேற்கூறிய துறைகளில் உள்ள அதிகாரிகள் நேற்றைய தினமும் தமது வாக்குகளை பதிவுசெய்திருந்தனர்.

COVID-19 நெருக்கடியைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தாபல் மூல வாக்காளர்கள் சமூக இடைவெளியை பராமரிக்கவும், முகக் கவசத்தை பயன்படுத்தவும், வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது கைகளைத் தூய்மைப்படுத்தவும், வாக்காளர்கள் தபால் வாக்குப்பதிவின் போது தங்கள் வாக்குச்சீட்டைக் குறிக்க பேனாவை கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தபால் மூல வாக்களார்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைந்ததும் தமது சரியான அடையாளத்தை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது