தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு எதிராக பொலிசார் நடவடிக்கை

IMG 5c338997d458ca7db4a31ab565b363b9 V

வவுனியாவில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் விளம்பரங்கள் பிரசுரங்களுக்கு எதிராக பொலிசார் இன்று முதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்

வவுனியா பண்டாரிகுளம் பாடசாலைக்கு முன்பாக ஒட்டப்பட்டிருந்த தேர்தல் பரப்புரை விளம்பரங்களை கிழித்து வருவதுடன் மதில்கள் மின்கம்பங்களில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு ஒயில் பூசும் நடவடிக்கையினையும் பண்டாரிகுளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்

IMG 7478200e81c2d6bb20605d10cc7e7562 V

நகரில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் சுயேட்சைக்குழுக்களின் தேர்தல் பரப்புரை பிரசுரங்கள் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளது

அவ்வாறு ஒட்டப்பட்டுள்ள பிரசுரங்கள் விளம்பரங்களுக்கு எதிராக பொலிசார் இன்று முதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது