நூற்றுக்கு 50 வீதமாக குறைக்கபடவுள்ள தனியார் பஸ் போக்குவரத்து!

bus
bus

பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்ற பயணிகளின் எண்ணிக்கை தற்போதைய சூழலில் குறைவடைந்துள்ளதால் தனியார் பஸ் போக்குவரத்தை நூற்றுக்கு 50 வீதமாக குறைக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவிக்கையில்

தற்போதைய சூழலில் பேருந்துகளில் பயணம் செய்வோரின் தொகை குறைந்துள்ளது. இதனால் பேருந்து உரிமையாளர்கள் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதனை ஈடுகட்டும் வகையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் முதல் சில மார்க்கங்களினூடாக பஸ் போக்குவரத்தினை நூற்றுக்கு 50 வீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பஸ்கள் பயண தடவைகளையும் நூற்றுக்கு 50 வீதமாக குறைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பஸ் போக்குவரத்து நூற்றுக்கு 50 வீதமாக குறைக்கப்படுமென கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். நாளையும், நாளை மறுதினமும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எதிர்காலத்தில் பயணிகளின் வருகையை அடிப்படையாக வைத்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.