50 ரூபாவை பெற்று கொடுக்காத முடியாதவர்கள் 5000 ரூபாவை எவ்வாறு பெற்று கொடுத்தார்கள்

arumugam thondaman
arumugam thondaman

தோட்ட தொழிலாளர்களுக்கு தேயிலை சபையின் ஊடாக 50 ரூபாவை பெற்றுகொடுக்க முடியாதவர்கள் தீபாவளி முற்பணம் 5000 ரூபாவை தேயிலை சபையின் ஊடாக எவ்வாறு பெற்று கொடுத்தார்கள் என இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொட்டகலை கிர்லஸ்பாம் லொக்கில் டிரேட்டன் ஆகிய தோட்ட பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த மக்கள் சந்திப்பில் மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், இந்த நான்கரை வருடத்தில் இந்த நாட்டில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது. இன்று மக்கள் ஆலயங்களுக்கு கூட போவதற்கு அஞ்சிகின்றனர். தோட்டபுறங்கள் ஒருபுறம் தேயிலையும் ஒருபுறம் காடாக காணப்படுகிறது.

இன்று மலையகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்பு திட்டமானது சோனியா காந்தியிடம் கலந்துரையாடி முன்னால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களோடு நான் அமைச்சராக இருந்த காலத்தில் இந்த நான்காயிரம் வீடுகள் கொண்டுவரப்பட்டது. ஒரு தோட்ட பகுதியில் 300 குடும்பங்கள் காணப்பட்டால் அங்கு 300 வீடுகள் கட்டப்படும் வர்த்தக நிலையக்கள் அமைக்கப்படும் அந்த வர்த்தக நிலையங்களை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கே வழங்கப்படும் அவ்வாறு வழங்கப்படுகின்ற போது நீங்கள் உழைத்து பெரும் வேதனத்தை உங்கள் பிள்ளைகளுக்குத்தான் வழங்க போகிர்கள் என தெரிவித்தார்.

இது போன்ற திட்டத்தினை தான் நாங்கள் வைத்திருந்தோம் ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் திடீரென உருவாகி அதனை மாற்றியமைத்துவிட்டார்கள் இ.தொ.காவில் இருந்து பத்து பேர் எனது தொழிற்சங்கத்திற்கு வந்தால் பத்து வீட்டு கமிஷன் முகவருக்கு ஒன்று என்ற அடிப்படையில் தான் வீடுகள் வழங்கப்படுகிறது. இந்த முறை நாங்கள் எமது ஜனாதிபதி வேட்பாளரிடம் 32 அம்ச கோரிக்கையினை முன்வைத்துள்ளோம்.

இதில் கல்வி, பல்கழைகழகம், ஆசிரியர் பயிற்சி நிலையம், மற்றும் வைத்தியசாலையின் தரத்தை உயர்த்தி தொழிலாளர்களுடைய பிள்ளைகளுக்கு தொழிற் பெற்றுக்கொடுப்பது போன்ற கோறிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

இன்று கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு நான் ஆதரவு வழங்கியதை வைத்து கொண்டு மலையகத்தில் உள்ள அமைச்சர்கள் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். நான் ஒன்றை அவர்களிடம் கேட்கிறேன் தாங்கள் சென்று அன்னச்சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியதை இ.தொ.கா என்றுமே விமர்சனம் செய்யாது.

இன்று கோட்டாபாய வெற்றிபெறுவது நிச்சயம் அதனை தாங்கிகொள்ள முடியாதவர்கள் இவ்வாறு விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள். விமர்சனம் செய்பவர்களுக்கு ஆசையிருந்தால் எம்மோடு வந்து இனைந்து கொள்ளலாம் என குறிப்பிட்டார்.