மக்களின் உயிர் பிரிந்தாலும் தாம் வாழவேண்டும் என்றே அரசாங்கம் நினைக்கின்றது-ரணில்

100059339 4705b606 b077 4e4f be0c 6b4e02cc6aa6
100059339 4705b606 b077 4e4f be0c 6b4e02cc6aa6

மக்களின் உயிர் பிரிந்தாலும் தாம் வாழவேண்டும் என்றே அரசாங்கம் நினைக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கடுமையாகச் சாடியிருக்கிறார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது,

சர்வதேச நாடுகள் தமது மக்களின் நலன்களை முன்நிறுத்தி செயற்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில், எமது அரசாங்கம் மக்களின் உயிர் பிரிந்தாலும் தாம் வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

தற்போதைய அரசாங்கத்தினால் பொருளாதாரப்போரில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. சுற்றுலாத்துறையையும், ஏற்றுமதியையும் அரசாங்கம் முழுமையாக மறந்துபோயிருக்கிறது.

அரச சேவையாளர்களுக்கான ஊதியத்தில் குறைப்புச் செய்யப்பட்டிருக்கிறது. .

ஏனைய சர்வதேச நாடுகள் கொரோனா நெருக்கடியிலிருந்து தமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், அதுவரையில் மக்களுக்கு அவசியமான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால் எமது நாட்டின் அரசாங்கம் என்ன செய்திருக்கிறது? அவுஸ்திரேலிய அரசாங்கம் அனைத்துக் குடும்பங்களுக்கும் நிவாரணமாக 3000 டொலர்களை வழங்கியது.

மக்கள் குறித்து சிந்திக்கின்ற, அவர்களுடைய நலன்களை முன்நிறுத்துகின்ற அரசாங்கம் இவ்வாறுதான் செயற்படும். ஆனால் எமது நாட்டில் நீர் மற்றும் மின்சாரக்கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களை பலிகொடுத்தேனும் வாழ நினைக்கும் அரசால் பொருளாதார போரை வெற்றிகொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

                </div>