ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய சமந்தா தீபால் ஜெயசேகர!

9db57dba b9a37f13 president 850 850x460 acf cropped 1
9db57dba b9a37f13 president 850 850x460 acf cropped 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து சாய்ந்தமருது வீடொன்றிற்குள் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பிலான சாட்சியங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு சாய்ந்தமருது பிரதேசத்திற்கு கண்காணிப்பு பயணம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் சஹ்ரான் ஹசீமின் சகோதரரான ரில்வான் ஹசீம், உள்ளிட்ட சிலர் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட போது அம்பாறை பிரிவிற்கு பொறுப்பாகவிருந்த சிரேஷ்ட்ட காவல் துறை அத்தியட்சகர் சமந்தா தீபால் ஜெயசேகர ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி அரச புலனாய்வு சேவை வழங்கிய தகவல்களுக்கு அமைய அக்கறைப்பற்று காவல் துறையினரின் உதவியுடன் அட்டாளைச்சேனையில் வீடொன்றினை சோதனையிட்டதாக தெரிவித்த அவர், சோதனையின் போது குறித்த வீட்டிற்குள்ளிருந்து பென் ட்ரைவ் ஒன்றும் சீ டி ஒன்றும், சஹ்ரானின் பிரசார பேச்சு அடங்கிய மெமரி கார்ட் ஒன்றும், சஹ்ரானின் சகோதரருடைய பிறப்பு மற்றும் விவாக சான்றிதழ்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது சாட்சியில் தெரிவித்துள்ளார்.