தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்..!

srilanka general election 2020 364x205 1

பொதுத் தேர்தலில் இம்முறை போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் 208 பேர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாவர். இவ்வாறு மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்ற 208 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில்,  172 பேர் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அதே கட்சியில் இல்லாமல் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிடவுள்ளனர். அதே வேளை கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 17 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

பாராளுமன்றத்தின் உத்தியோக பூர்வ இணையதளமான Manthri.lk இணையதளம் இது பற்றி தரவொன்றினை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளமைக்கமைய ,

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட 107 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் அந்த கட்சி தவிர்ந்த மேலும் இரு கட்சிகளிலும் ஏனைய கட்சியொன்றிலும் போட்டியிடுகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியில் 71 வேட்பாளர்களும்,  20 வேட்பாளர்கள் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிலேயும் பொதுஜன பெரமுனவில் நால்வரும் ஏனைய கட்சிகளில் இருவரும் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட 10 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலிலிருந்து விலகியுள்ளனர்.

இதே போன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட 94 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் 81 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலும் 6 பேர் ஐக்கிய மக்கள் சக்தியிலும் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலும் போட்டியிடுகின்றனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட 6 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலிலிருந்து விலகியுள்ளனர்.

2015 பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட 16 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் இம்முறையும் அதே கட்சியிலும் ஒருவர் மாத்திரம் பொதுஜன பெரமுனவிலும் போட்டியிடுகின்ற அதேவேளை எஞ்சியுள்ள ஒரு வேட்பாளர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. 

கடந்த தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரும் வேறு கட்சியில் மாறி போட்டியிடாத போதிலும் தேசிய மக்கள் சக்தி என்ற மாற்று பெயர் கொண்ட கூட்டணியில் போட்டியிடுகின்றனர்.