வெள்ளை மரை மான் ஒன்று கண்டுபிடிப்பு!

625.0.560.350.390.830.053.800.670.160.91 1 4
625.0.560.350.390.830.053.800.670.160.91 1 4

மத்திய மலையகத்தின் தும்பர பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் அபூர்வ இனமான வெள்ளை மரை மான் ஒன்று சுற்றாடல் ஆர்வலர் ஒருவரின் கண்ணில் சிக்கியுள்ளது.

பல வருடங்களுக்கு முன்னர் பிட்டவலதென்ன என்ற காட்டுப் பகுதியில் வெள்ளை மரை மான் ஒன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மரை மான் மலையகத்தின் வேறு ஒரு பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

காட்டுப் பகுதியில் ஆராச்சியில் ஈடுபட்டு வரும் நேரத்தில் இந்த வெள்ளை மரை மானை கண்டதாகவும் அதனை புகைப்படம் எடுத்துள்ளதுடன் அது குறித்து தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகவும் சுற்றாடல் ஆய்வாளரான கே.பி. லசித சுரங்க என்பவர் தெரிவித்துள்ளார்.