போதைப்பொருளை இல்லாதொழித்த நாடு எதிர்கால தலைமுறையினருக்கு வழங்கப்படும்!

1573986441 Gotabya Rajapaksha 2 3
1573986441 Gotabya Rajapaksha 2 3

போதைப்பொருளை இல்லாதொழித்த நாடு எதிர்கால தலைமுறையினருக்கு வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

பல்வேறு வழிகளின் ஊடாக நாட்டுக்கு போதைப்பொருளை எடுத்து வருதல் மற்றும் விநியோகித்தல் செயற்பாட்டை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்ததை போன்று போதைப்பொருளில் இருந்தும் நாடு மீட்டு தரப்படுமென கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளத்தினால் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும் பேலியகொட மாடி குடியிருப்பு மற்றும் பெத்தியகொட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்து தருமாறு மக்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தியுள்ளார்.

முறையான பராமரிப்பு இன்மையினால் அழிவுக்குள்ளாகியுள்ள சியம்பலாபே உடற்பயிற்சி மருங்கும் ஜனாதிபதியினால் பார்வையிடப்பட்டுள்ளது.

அதை துரித கதியில் புனரமைப்புக்கு உட்படுத்தி அபிவிருத்தி செய்து தருமாறு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் கோரிக்கைகள் துரிதமாக விசாரிக்கப்பட்டு நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.