ஜனாதிபதி தொல்பொறுள் சான்றுகளை பாதுகாக்க திட்டம்!

1 13
1 13

நாட்டில் உள்ள தொல்பொறுள் சான்றுகளை பாதுகாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.

தொல்பொறுள் குறித்த சட்டத்திட்டங்களை மாற்றியமைக்கவும் இதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் தொல்பொறுள் வல்லுநர்கள் மற்றும் பௌத்த மகா சங்கத்தின் உறுப்பினர்கள் சிலரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.