லண்டனில் தீ விபத்துக்கு உள்ளான பேக்கரி!

Edo2 o WoAEL0AI 1
Edo2 o WoAEL0AI 1

மேற்கு லண்டனில் உள்ள பேக்கரி மற்றும் கட்டிடத்தில் பெரிய தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

வியாழக்கிழமை மாலை மினெர்வா சாலையில் அமைந்துள்ள பேக்கரியில் ஏற்பட்ட தீயானது அருகிலுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கும் பரவியுள்ளமை குறி;பிடத்தக்கது.

தீயை அணைப்பதற்கு 15 தீயாணைப்பு வாகனங்களும் 80 தீயாணைப்பு வீரர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதன்படி உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 6.20 மணியளவில் தீயாணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் தீ விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்தினால் கருப்பு புகைகள் அப் பகுதியை சூழ்ந்து காணப்பட்டமையினால் குறித்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களின் கதவு, ஜன்னல்களை மூடுமாறும் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக எவரும் காயமடையாத நிலையில் தீ விபத்தினால் உண்டான சேத விபரங்கள் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.