தப்பிச் சென்ற கொரோனா நோயாளி சென்ற இடங்கள் குறித்து தகவல்

kanthakadu
kanthakadu

கொழும்பு  IDH  வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்று பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தற்போது கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலைய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் குறித்த கொரோனா தொற்றாளர் சென்ற இடங்கள் தொடர்பாக அனைத்து தகவல்களும் புலனாய்வு பிரிவினால் கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அந்த இடங்களுக்கு சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னர் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளி ஒருவர் நேற்று முன்தினம் அந்த வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றார்.

இதன்பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.