விக்டோரியாவில் புதிதாக 459 பேருக்கு கொரோனா தொற்று, 10 இறப்புகளும் பதிவு

australia reports
australia reports

அவுஸ்ரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் புதிதாக 459 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது மிக உயர்ந்த நாளாந்த அதிகரிப்பு என்றும் நேற்று முன்தினம் மட்டும் 357 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநில முதலவர் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

அத்தோடு விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 இறப்புகளைப் பதிவு செய்துள்ளதாகவும் முதலவர் டானியல் அண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

45,000 க்கு மேற்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையிலேயே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மற்ற நாடுகளில் காணப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட நெருக்கடியின் மோசமான நிலையை அவுஸ்ரேலியா தவிர்த்துள்ளது, ஆனால் விக்டோரியாவில் தொற்றினை கட்டுப்படுத்த அதிகாரிகள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை விக்டோரியாவில் இதுவரையில் 14,400 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.