இணையத்தளம் மூலம் மாத்திரம் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 26 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 26 1

நாட்டில் 2020ம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் இணையத்தளம் மூலம் மாத்திரம் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தங்களது விண்ணப்பங்களை தாங்களே பூர்த்தி செய்து, இறுதிப் பகுதியை அச்சிட்டு பூர்த்தி செய்து தபாலில் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்களும் இணையத்தளம் மூலமே கோரப்பட்டுள்ளதோடு, அது பாடசாலையின் அதிபர் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் ஓகஸ்ட் 31ம் திகதிக்கு முன்னர் ஒன்லைன் முறை மூலம் சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித அறிவித்துள்ளார்.

இம்முறை அனைத்து பரீட்சார்த்திகளும், இணையத்தளம் மூலம் மாத்திரம் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் (https://www.doenets.lk/) இணையத்தின் மூலமாக (https://onlineexams.gov.lk/onlineapps/) உரிய வழிமுறைகளை கவனமாகப் படித்து அதற்கமைய விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து ஒன்லைனில் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக தகவல்களை 011 2784537 அல்லது 011 2784208 அல்லது 011 3188350 அல்லது 011 3140314 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.