சுமந்திரன், சிறீதரன் மீது தேர்தலின் பின் நடவடிக்கை ; மாவை அறிவிப்பு

mavai 000 768x416 1

“கட்சிக்குள் இருந்து கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ள வேட்பாளர்களான எம்.ஏ. சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் தொடர்பில் எதிர்வரும் தேர்தலுக்குப் பின்னர் கட்சி நடவடிக்கை எடுக்கும். இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தேர்தல் நேரம் பல பாதிப்புக்களைக் கொண்டு வரும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சிக்கு முறைப்பாடுகள் கிடைத்தால் தேர்தலுக்குப் பின்னர் கட்சி அது பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராசா.

நேற்றிரவு (26) தொலைக்காட்சி ஒன்றில் நேரடி ஒளிபரப்பு நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறினார்.

வேட்பாளர்களான சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பில் கட்சி இதுவரை அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதமை ஏன் என அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“கட்சிக்குள் இருந்து கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ள சுமந்திரன், சிறிதரன் தொடர்பில் எதிர்வரும் தேர்தலுக்குப் பின்னர் கட்சி நடவடிக்கை எடுக்கும். இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தேர்தல் நேரம் பல பாதிப்புக்களைக் கொண்டு வரும்.”