மீண்டும் கூடும் தேர்தல்கள் ஆணைக்குழு – தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் வாக்களிப்பு குறித்து இறுதி முடிவு

election commision

தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் வாக்களிப்பு குறித்து இறுதி முடிவு செய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடுகிறது.

அதற்கமைய அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று (திங்கட்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

அதற்காக அனைத்து கட்சி செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இன்று காலை 10.30 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு விசேட தினமாக ஜூலை 31ஆம் திகதி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வாக்கெண்ணும் நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.