உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி சஹ்ரான் அல்ல!

625.500.560.350.160.300.053.800.900.160.90 31 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 31 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம் இல்லை. நவ்பர் மௌலவி என்ற நபரே என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாசிம் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி இல்லை என நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கட்டாரில் 19 வருடங்களாக வசித்த, சர்வதேச தொடர்புகளை பேணிவந்த நவ்பர் மௌலவி என்பவரே தாக்குதலின் சூத்திரதாரி என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதலொன்று இடம்பெறலாம் என்பது குறித்து பத்துமாதங்களுக்கு முன்னரே புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மெண்டிசிடம் தெரிவித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.