நீர்கொழும்பு சிறைச்சாலை மோசடி விசாரணைக்கு பாதிப்பில்லை; பொலிஸார்

unnamed 2 16

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் சிறைச்சாலையின் அத்தியட்சகர் அனுருத்த சம்பாவோ கைது செய்யப்படவில்லை என்பதினால் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று பொலிஸ் ஊகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்ப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இதனை தெரிவித்தார். 

இதன் போது இவர் மேலும் கூறியதாவது,

நீர்கொழும்பு சிறைச்சாலையின் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய  நீர் கொழும்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் அனுருத்த சம்பாவோ , பிரதான சிறைச்சாலை அதிகாரி உபாலி சரத் பண்டார மற்றும் பதில் சிறைச்சாலை அதிகாரிகளான நிசாந்த சேனாரத்ன , பிரசாத் காலிங்க கலுவக்கல என்பவருக்கு நீதி மன்றம் பிடியானை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இவர்கள் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்nகொண்டுவருவதுடன் , இருவர் குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் தொடர்புடைய சந்தேக நபரான அனுருத்த சம்பாவோ என்ற நபரை கைது செய்வதற்காக விசாரணைகள் இடம் பெற்று வருவதுடன், அவர் தலைமறைவாகியிருக்கின்றார்.

சந்தேக நபர் தொடர்பில் தொழிநுட்ப ரீதியிலான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின் நிலையில் , அவர் அதிலும் சிக்காமல் இருந்து வருகின்றார். ஆனாலும் விரைவில் அவரை கைது செய்வதுடன் , அவர் வெளிநாடுகளுக்குச் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றது.

இதேவேளை சந்தேக நபரை கைது செய்யவில்லை என்பதற்காக இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சந்தேக நபர் கைது செய்யப்படாவிட்டாலும் அந்த விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும்