பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரி தொடர்பில் விசாரணைகள்!

318373166investigation 1
318373166investigation 1

நாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரி அனுருத்த சம்பாயோவின் சகோதரர் என அறியப்படும் முன்னாள் காவல் துறை அதிகாரி ஒருவரிடமும் அவரது உறவினர்கள் சிலரிடமும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றை பெற்றுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலை கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்கிய குற்றச்சாட்டில் அனுருத்த சம்பாயோ பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில்,குறித்த வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.