உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் தொடரும் விசாரணைகள்!

acf cropped 3
acf cropped 3

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தடுப்பதற்கான பொறுப்பினை தாம் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழுவில் இன்றுடன் மூன்றாவது முறையாக சாட்சிமூலம் வழங்கிய அவர் காவல் துறையினரின் அனுமதி இன்றி அரச புலனாய்வு சேவை அதிகாரிகளால் எந்தவொரு நபரையும் கைது செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச ரீதியில் உள்ள பயங்காரவாத அமைப்பான ஐ.எஸ். இன் தாக்கம் இலங்கையில் எவ்வாறு பரவக்கூடும் என்பது தொடர்பில் தாம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் திகதி காவல்துறை தலைமையகத்தில் வைத்து விளக்கமளித்ததாகவும் அந்த நிகழ்வில் சிரேஷ்ட காவல் துறை அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.