கிழக்கு மாகாணத்தின் பத்து சிறு கட்சிகள் கோத்தாபாயவிற்கு ஆதரவு

amal 1
amal 1

கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டு வருகின்ற பத்து சிறு கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகஇன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி, மக்கள் முன்னேற்ற கட்சி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறி ரெலோ, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, கிழக்கு மீளெழுச்சி கழகம், ஈழ புரட்சி அமைப்பு, தமிழர் சமூக ஜனநாய கட்சி, முற்போக்கு தமிழர் அமைப்பு கட்சிகளே இவ்வாறு ஆதரவு வழங்கவுள்ளன.

தமிழ் மக்களின் உரிமைகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இதன்போது தெரிவித்தார்.