சீனா, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 300 க்கும் மேற்பட்டோர் இலங்கை வருகை

srilankan airlines

மத்திய கிழக்கு நாடுகளில் பணிகளுக்குச் சென்ற 349 இலங்கையர்கள் இன்று (01/08) காலை அந்த நாடுகளிலிருந்து இரண்டு விமானங்களின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திதை வந்தடைந்துள்ளனர்.

முதலாவது விமானம் இன்று அதிகாலை 12.00 மணிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் 335 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அதிகாலை 1.30 மணியளவில், கத்தார், டோஹாவில் வணிகக் கப்பல்களில் வேலை செய்வதற்காக சென்ற 14 இலங்கையர்கள், கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும், இலங்கையில் சீன முதலீட்டு திட்டங்களில் பணிபுரியும் 29 சீன நாட்டு பிரஜைகள் நேற்று மாலை 6.30 மணிக்கு சீனாவின் ஷாங்காயில் இருந்து சீனா ஈஸ்டன் விமானத்தில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்ப்பட்டுள்ளனர்.