தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ள இரு கைதிகள்!

1596362761 kalutara prison 2
1596362761 kalutara prison 2

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் களுத்துறை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றைய இரு கைதிகளையும் தேடி களுத்துறை வடக்கு பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து கூட்டு செயற்பாடு ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையான இவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்காக களுத்துறை சிறைச்சாலையின் தனி இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.