கவிதை | எம் நிலையினை உரைக்கும் நீதியின் குரலே!

C.V.Vickneshwaran
C.V.Vickneshwaran

அன்றொரு நிழல் அரசு இருந்தது
அதற்கென பெரும் மாண்புகள் இருந்தன
எம் சொல்லுக்கு ஒரு மதிப்பு இருந்தது
எமை தொடா காவலும் மிகுந்தது
முள்ளிவாய்க்காலில் முழு உலகுமாய்
சரித்தனர் எங்கள் யுகத்தின் வீரத்தை

எமை அடிமையாக்க எண்ணியவர்
ஆக்கினர் எம்மை பிணங்களாய்
அதில் தம் வெற்றிப் பாடலைப் பாடி
செய்தனர் பிண அரசியலை

எம் தலைவர்கள் எனப்பட்டோர் என்ன செய்தனர்?
அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு?

அவர்கள் எமை பிணங்களாக்கினர்
இவர்கள்அதை வைத்து ஆசனங்கள் ஆக்கினர் பணத்திற்கும் பதவிக்கும்
பின்பு,கோடிகளை அள்ள
அவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர்
அய்நாவில் நின்று அவர்களை பாதுகாத்தனர்


இதற்காகவா எங்களை தூண்டினீர்?

வாக்குகளை சுறண்டி வரவு பாக்கிறீரா?

வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி என்றீர்
பிறகு சம்பந்தம் இல்லாப் பேச்சு
இனப்படுகொலைக்கு நீதி வாங்கி தருவோம் என்றீர்
பிறகு சர்வதேச விசாரணை முடிந்தது என்றீர்

ரணிலின் இருக்கும் பாசம்
ரணத்திலுள்ள மக்கள்மீது இல்லையே?
மங்களவுக்காக துடித்ததுபோல
எம் மக்களுக்காக துடிக்கவில்லையே?

இங்கே வேசம்…
அங்கே பாசம்….

இனியுங்கள் வேடங்கள் எடுபடா
இனியுங்கள் பொய்கள் எடுபடா
இனியுங்கள் கள்ளங்கள் எடுபடா
இனியுங்கள் ஏமாற்றங்கள் எடுபடா

வந்தது புதிய தலைமைமாண்புறு மாற்றமாய்…
எம் இனத்தின் நீதியின் முகமாய்
எம் இனத்தின் நீதியின் குரலாய்

நேர்கொண்ட பார்வை
நேர்மை இவர் அணிகலன்
வெளிப்படை இவர் அணுகுமுறை
மண் மீதும் இனம்மீது மாறாப் பற்று
மாண்டவர்மீது சத்தியக் கொள்கை
சரித்திரம்மீது உயிர்ப்பிடிப்பு

என் இனத்தின் நிலையுரைக்கும்ஈழ நிலத்தின் நிலையுரைக்கும்
நீதியின் காவலன்
கரம் கொடுங்கள் எங்கள் விதி வெல்ல
கரம் கொடுங்கள் மதியாலே விதி வெல்ல
கரம்கொடுங்கள் நீதியின் காவலனுக்கு!

ஈழ பாரதி