காணாமல் போன பூனை மீட்பு!

unnamed 4 1
unnamed 4 1

வெலிக்கடை சிறைச்சாலையில் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு பின்னர் காணாமல் போன பூனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சிம் அட்டைகளும், மெமரி காட் ஒன்றும், பூனையில் கழுத்தில் கட்டப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டடு அவை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து சிறைச்சாலை புலனாய்வு துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த பூனையை தம் பொறுப்பில் வைத்திருந்தனர்.

இந்தநிலையில் இந்த பூனை பொலிசாரிடம் ஒப்படைக்கப்படும் வரை சிறைச்சாலை அறையொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த பூனை காணாமல் போயிருந்தது.

பூனை சிறைச்சாலையின் பிறிதொரு இடத்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.