பொது தேர்தலின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினக்கு வாழ்த்து செய்தி!

unnamed 8
unnamed 8

பொது தேர்தலின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட விசேட வெற்றிக்கு அமெரிக்கா இந்தியா மாலைத்தீவு உட்பட நாடுகள் வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளன.

இதேவேளை எதிர்வரும் காலத்தில் இரு தரப்பு உறவினை புதிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு இலங்கையும் இந்தியாவும் உறுதிபூண்டுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் நேற்று உரையாடியபோது இரு தலைவர்களும் உறுதிபூண்டதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சவால்களுக்கு மத்தியில் மிகவும் செயற்றிறன் மிக்கவகையில் இந்த தேர்தல்களை நடத்தி முடித்தமைக்காக அரசாங்கத்துக்கும் தேர்தல் திணைக்களத்துக்கும் இந்தியப் பிரதமர் பாரட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன், மிகுந்த ஆர்வத்துடன் இந்த தேர்தலில் வாக்களித்த இலங்கை மக்களையும் பாராட்டிய இந்தியப் பிரதமர் இரு நாடுகளாலும் பகிரப்படும் வலுவான ஜனநாயகத்தின் பெறுமானங்களை இது பிரதிபலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகள் பழைமையானதும் பல் பரிமாணத்துடனானதுமான இந்திய இலங்கை உறவினை மேலும் வலுப்படுத்துவதற்கான பகிரப்பட்ட பொறுப்பு தொடர்பாகவும் இருவரும் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.