காடைக் குஞ்சி அதிகளவில் விரைவாக உற்பத்தி செய்யும் இயந்திரத்தை கண்டு பிடித்த பாடசாலை மாணவன்

d09
d09

முயற்சி செய்கின்ற போது தோல்விகளை எதிர்கொண்டால் துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சித்து மறுபரீசிலனை செய்தால் தான் வெற்றி பெற முடியும் என அஸிஸ் முஹமட் இக்றாம் என்னும் மாணவன்  தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட முயற்சியால் மின்சாரத்தின் மூலம்  எளிய முறையில்  காடைக் குஞ்சி பொரிக்கும் இயந்திரத்தை  கண்டு பிடித்துள்ள அவர் ஊடகங்களிற்கு கருத்துக்களை முன்வைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம்   சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 6ல் கல்வி பயிலும் அஸிஸ் முஹமட் இக்றாம் என்னும் இம்மாணவன்  தினமும்  காடை முட்டைகளை   இயந்திரத்தின் ஊடாக அடைவைத்து குஞ்சி பொரிக்கும்  உற்பத்தியில் ஆர்வத்துடன்  செய்து வருகின்றார்.

  இம்மாணவன்  அப்துல் அஸீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை பெண் உறுப்பினர் சுபையிலின்  மகனாவார்.இவரது பல கண்டுபிடிப்புகளுக்கு பெற்றோர் முதல் கொண்டு சகோதரர்கள் நண்பர் ஒருவரும் பெரும் உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதே வேளை ஒரே தடவையில் சுமார் 50க்கும் அதிகமான காடை குஞ்சுகளை உற்பத்தி செய்ய முடியும் எனவும்  எதிர்காலத்தில் தனக்கு ஊக்கமும் ஆக்கமும் தரப்பட்டால் பண்ணை ஒன்றினை நிறுவி பலருக்கு தொழில்வாய்ப்பினை வழங்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் இம்மாணவன் நாட்டில் கொரோனா அனர்த்தத்தில் கிடைக்கப்பெற்ற விடுமுறைகளை பயன்படுத்தி மக்களின் பாவனைக்கு தேவையான பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

d14
d14
d17
d17
d15
d15