எதிர்த்தரப்பு வங்குரோத்து அரசியலில் ஈடுபடுகிறது – ஹக்கீம்!

Rauff hakeem
Rauff hakeem

இந்­நாட்டின் பயங்­க­ர­வா­தத்­திற்கு முஸ்லிம் இளை­ஞர்கள் பலி­யா­கி­விடக் கூடாது என்­ப­தற்­கா­கவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்­றொரு இயக்­கம்­ உ­ரு­வாக்­கப்­பட்­டது. இந்த இயக்­கத்தின் மீதும்­அதன் தலை­மைத்­து­வத்தின் மீதும் வீண் பழியை சுமத்­து­வது என்­பது எதிர்த் தரப்­பி­ன­ரு­டைய வங்­கு­ரோத்து அர­சி­ய­லையும் மிகப் பெரிய ஜன­நா­யக விரோத செயற்­பாட்­டையும் எடுத்­துக்­காட்­டு­கின்­றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசியத் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
அண்­மையில் கண்டி ரோயல் ஹோட்­டலில் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்து இடம்­பெற்ற கூட்­டத்தில் கலந் கொண்ட அமைச்சர் ரவுப் ஹக்கீம் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது இவ்­வாறு இதனைத் தொிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தொிவிக்­கையில்

என்­னையும் பயங்­க­ர­வாதி சஹ்­ரா­னையும் தொடர்­புப்­ப­டுத்தி பழைய ஒரு காணொ­ளியைக் காட்­சிப்­ப­டுத்தி அவ­ருக்கும் எனக்கும் சம்­மந்தம் இருப்­பது போன்று ஒரு தோற்­றப்­பாட்டை காட்ட எத்­த­னித்­த­னிக்கும் இழி­வான செயற்­பாட்டை வன்­மை­யாக கண்­டிக்­கிறேன்.

இதன் பின்­ன­ணி­யென்­ன­வென்றால், 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 40 க்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்று ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரைப் பெற்றுக் கொண்டோம். ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஒரு உறுப்­பி­னரைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக ஒரு வாய்ப்பு கிட்­டின. தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்கும் மூன்று ஆச­னங்கள் கிடைக்கப் பெற்­றன.

இதில் காத்­தான்­கு­டியைச் சேர்ந்த தற்­போதை ஜனா­தி­பதி வேட்­பாளர் ஹிஸ்­புல்லாஹ் தோல்வி அடைந்தார். அன்று மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் இருந்து தோல்வி அடைந்த அவர் நாங்கள் உரு­வாக்­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் சர­ண­டைந்து அவ­ரி­டத்தில் ஒரு தேசியப் பட்­டியல் ஆச­னத்தைப் பெற்றுக் கொண்ட தினத்தில் தம்­மு­டைய ஆத்­தி­ரத்தை குண்­டர்­களை ஏவி அடா­வடித் தனத்தை கட்­ட­விழ்த்து எம்­மு­டைய கட்­சிக்­கா­ரர்­களைத் துன்­பு­றுத்தி அடா­வ டித் தனத்தை கட்­ட­விழ்த்து மிக மோச மான நட­வ­டிக்­கைகள் அங்கு அரங்­கேற்­றி னார்.

அது மாத்­தி­ர­மல்லா மல், பொலிஸார் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­காமல் தடுக்­கப்­பட்­டார்கள். இந்தச் சந்­தர்ப்­பத்தில் உட­ன­டி­யாக கட்­சியின் தலைவன் என்ற வகையில் காத்­தான்­குடி சென்றேன். பாதிக்­கப்­பட்ட கட்சிக் காரர்ர்­க­ளுக்கு ஆறுதல் கூறு­வ­தற்­கா­கவும் உரிய நட­வ­டிக்கை மேற்கொள்­வ­தற்­கா­கவும் அங்கு சென்றேன். பாதிக்­கப்­பட்­ட­வர்­களைச் சந்­திக்கப் போன இடத்­திலே அங்கு குழு­மி­யி­ருந்­த­வர்கள் மத்­தியில் குறித்த பயங்­க­ர­வா­தி­யும்­க­லந்துக் கொண்­டி­ருந்­தி­ருக்­கலாம். அது எனக்கு தெரி­யாத விடயம். எனக்கு அந்த பயங்­க­ர­வா­திக்கும் எந்த சம்­மந்­தமும் கிடை­யாது

இந்த நிலையில் வேண்டும் என்று இவ்­வா­றான பயங்­க­ர­வாதி ஒரு­வ­ரையும் பிற்­பட்ட நாட்­களில் பயங்­க­ர­வா­தத்தில் ஈடு­பட்­ட­வ­ரையும் அகஸ்­மாத்­தாக இவ்­வா­றான ஒரு சந்­தர்ப்­பத்­திலே இடையில் புகுந்து ஒரு சந்­திப்பை ஏற்­ப­டுத்திக் கொண்ட பிற்­பாடு என்­னையும் சம்­மந்­தப்­ப­டுத்தி பயங்­க­ர­வா­தத்­திற்கும் எனக்கும் தொடர்பு இருப்­ப­தாகக் காட்­டு­கின்ற விவ­காரம் மிகவும் அபத்­த­மா­னது.

எனவே தங்­க­ளு­டைய சொந்த சுய இலாப அரசியலுக்காக எதிர்த்தரப்பு ஊடகங் களைப் பாவித்து எம்மை வலுவிழக்க செய்ய விளைவது என்பது மிகபெரிய ஜனநாயக விரோத செயற்பாடு. இதை வன்மையாகக் கண்டிப்பது மாத்தி ரமல்ல இந்த செயற்பாட்டிலே நாங்கள் ஒரு போதும் இவ்வாறான பயங்கர வாதி களை ஊக்குவிப்பவர்களாக நாங்கள் இருந்த தில்லை. இனியும் இருக்கப் போவ தில்லை என்றார்.