இன்று இரவுவானில் தோன்றும் மூன்றாவது பிரகாசமான பொருள்

Sri Lanka seen from International Space Station ISS Nasa 682x1024 1

இன்று இரவு வானில் தோன்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) இலங்கை மக்கள்  வெற்றுக் கண்களால் பார்ப்பதற்கு அரிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

வானம் தெளிவாக இருந்தால், சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றுக் கண்களால் இன்றிரவு அவதானிக்க முடியும். இது வானில் நிலைகொண்டுள்ள, மூன்றாவது பிரகாசமான பொருள் என்பதுடன் ஒரு மணி நேரத்திற்கு ஆயிரக்கணக்கான மைல்கள் வேகத்தில் பயணம் செய்யும்.

இதனை அவதானிக்கும் வாய்ப்பானது இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகி, அடிவானத்திற்கு கீழே கடப்பதற்கு முன் அதிகபட்சம் 3 நிமிடங்கள் தெரியும். 

இது வடமேற்கு திசையில் 29 பாகைக்கு தோன்றி தென்கிழக்கு மேலே 33 பாகையில் மறைந்துவிடும்.

Sri Lanka seen from International Space Station ISS Nasa 682x1024 1