மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சுப் பதவி மஹிந்த அமரவீரவுக்கு வழங்கல்

z p10 Metta
z p10 Metta

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்காக தீர்மானிக்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கு வழங்குமாறு அவர் தெரிவித்திருந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

அதற்கமைவாக சுற்றுச்சூழல் அமைச்சுப் பதவியானது மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் அந்த அமைச்சுப் பதவி மஹிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று கண்டியில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவில் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.