வவுனியா விபத்தில் ஒருவர் காயம்!

IMG 20200813 WA0005
IMG 20200813 WA0005

வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதவாச்சி பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வருகைதந்த முச்சக்கரவண்டி ஈரட்டை பெரியகுளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரையில் இருந்து மின்சாரதூணுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்து தொடர்பாக ஈரட்டை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்,