மட்டக்களப்பு தரிசன நிறுவனத்தினால் வெள்ளைப்பிரம்பு தினம்

1
1

கிழக்கு மாகாணத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்ற தரிசன நிறுவனம் கண்பார்வையற்ற மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கி உள்ளது என வாழைச்சேனை பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தரிசன நிறுவனத்தினால் வெள்ளைப் பிரம்பு தின நிகழ்வுகள் வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இன்று நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

கிழக்கு மாகாணத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்ற தரிசனம் விழிப்புனர்வற்றோர் பாடசாலை ஆற்றுகின்ற சேவையினூடாக இன்று எத்தனையோ மாணவர்களை பட்டதாரிகளை உருவாக்கி பாரிய சேவையினை செய்துள்ளது.

இவ்வாறு கண் பார்வையற்றவர்களை என்று நாங்கள் குறிப்பிடுபவர்களை சொல்லுவார்கள் எண்ணும் எழுத்தும் நாங்கள் கற்றுக் கொண்டோமானால் அவர்கள் கண்ணுடையவர்கள் தான். அந்தவகையில் தரிசனத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்ற பிள்ளைகளும் கல்வி பயில வருகின்றவர்களும் கண்பார்வையுடையவர்கள் தான்.

அவர்கள் இந்த பாடசாலைக்கு சேர்வதற்கு முன்னர் கண் பார்வையற்றவர்களாக இருந்திருந்தாலும் அவர்கள் எண்ணையும் எழுத்தையும் கற்பதற்கான வாய்ப்பினை தரிசனம் கொடுத்துள்ளதனால் இந்த பாடசாலையில் படிப்பவர்கள் அனைவரும் கண்பார்வையுடையவர்கள் தான். அவர்கள் சொந்தக் காலில் நிற்பதற்கான வாய்ப்பினை தரிசனம் உருவாக்கிக் கொடுக்கின்றது.

விழிப்புனர்வற்றோர் அவர்களுக்கான வாய்ப்புக்களை வழங்குவதற்காகவும் அவர்களுக்கு எது தேவையான என்ற ஆதரவை வழங்குவதற்காகவும் அவர்களுக்கு எங்கள் அனுதாபம் தேவையில்லை என்பதற்காகவும் இந்த செய்தியினை இந்த சமுகத்திற்கு கொடுப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது தான் இந்த வெள்ளைப் பிரம்பு தினம் என்றார்.

மட்டக்களப்பு தரிசன நிறுவனத்தின் தலைவர் அ.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித், வாழைச்சேனை இந்துக்கல்லூரியின அதிபர் அ.ஜெயஜீபன், தரிசன நிறுவன அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது தரிசன மாணவர்களினால் குழு நடனம், பாடல், மற்றும் இசைக்கச்சேரி போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், தரிசனம் வெள்ளி மலர் சஞ்சிகை அதிதிகளிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் இந்நிகழ்வில் பங்குபெற்றிய தரிசன மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.