வரிக்கொள்கைகளை மாற்றியமைப்பு- சஜித்

Sajith 6
Sajith 6

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமையினால் வரிக்கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் இருக்கும் சஜித் ஏன் இதனை நடைமுறைப்படுத்தவில்லை என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கு பதிலளிக்கையில் தனது தந்தையும் அமைச்சராக இருந்த போது அவருக்கும் இதே சூழல் ஏற்பட்டது.

அதேபோன்று தானும் ஜனாதிபதி அதிகாரத்தை ஏற்றதும் அதற்கான உத்தரவை பிறப்பிக்க நடவடிக்கை எடுப்பேன்.

அந்த வகையில் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, நாட்டின் அனைவருக்கும் பொதுவானதொரு சேவையை முன்னெடுக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.