பல்கலைக்கழக மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் – ப.உஜாந்தன்

vlcsnap 2020 08 20 14h37m21s832
vlcsnap 2020 08 20 14h37m21s832

யாழ் பல்கலைக்கழ கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு இன்றையதினம் பல்கலைக்கழகத்தில் உள்ள கலைப்பீட மாணவர் ஒன்றிய அறையில், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ப.உஜாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த அவர் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அடிப்படை உதவிகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பல்கலைக்கழக பேரவையிடமும் துணைவேந்தரிடமும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிடமும் கோரிக்கை விடுக்கின்றோம்.

மேலும் கொரோனோ அபாய காலத்தில் பல்கலைக்கழகத்தில் கற்றல் செயற்பாடுகள் நடைபெறாததால் விடுதிகளிலும் வாடகை வீடுகளிலும் தங்கியிருந்த மாணவர்கள் வெளியேறியிருந்த நிலையில் தற்போது அதற்கான வாடகைகளை உரிமையாளர்கள் கோருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் மிகவும் வறுமைப்பட்ட மாணவர்களே கல்வி கற்கின்ற நிலையில் இந்த வாடகைகத் தொகையைக் கூட செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இதற்கான தீர்வொன்றையும் வழங்க வேண்டும்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மலையகம் என பல இடங்களிலும் இருந்து வந்து கல்வி கற்கின்ற மாணவர்கள் மிக வறுமை நிலையிலையே உள்ளனர்.அதே நேரம் பல்கலைக்கழகத்திலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இவற்றைக் கருத்திற் கொண்டு சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் உரிய நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.