பழைய பேருந்து நிலையத்தில் உள்ளூர் சேவை 25 ஆம் திகதி இறுதி முடிவு:எம்.பி திலிபன்!

IMG ccaaa1c6d0673da26df3e4f36cfc4442 V 1
IMG ccaaa1c6d0673da26df3e4f36cfc4442 V 1

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலிபன் வவுனியா வர்த்தகர்களுடன் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் விடயங்கள் குறித்து வர்த்தகர் சங்கத்தில் நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது எதிர்வரும் 25 ஆம் திகதி பழைய பேருந்து நிலையத்திலிருந்து உள்ளூர் பேருந்து சேவைகள் மேற்கொள்வதற்கு இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் தெரிவித்துள்ளார் .

வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் எஸ் . சுஜன் தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் வர்த்தகர் சங்க மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு வர்த்தகர்கள் எதிர்நோக்கும் விடயங்கள் நகரை அபிவிருத்தி செய்யும் முறைமைகள் அதற்கு வர்த்தகர்களின் பங்களிப்புக்கள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து உள்ளூர் பேருந்து சேவைகள் மேற்கொள்வது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள கலந்துரையாடலின்போது இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் வர்த்தகர்களுக்கு தெரிவித்துள்ளார் .

கட்சி பேதங்களை மறந்து மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கும் நகரை நவீனமயமாக்குவதற்கும் வர்த்தகர்களுடன் கைகோர்த்து பணியாற்ற முன்வருமாறும் கடந்த காலத்தில் நான் ஒரு வர்த்தகர் என்ற ரீதியில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் விடயங்கள் குறித்து அறிந்து வைத்திருப்பதாகவும் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து வன்னி மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார் .

நிகழ்வில் இறுதியில் வர்த்தகர் சங்கத்தினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவிக்கப்பட்டு நினைவு கேடயமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.