போலி அச்சுறுத்தலுக்கு அஞ்சவேண்டாம்-மைத்திரி

maithiri 1
maithiri 1

பயங்கரவாத அச்சுறுத்தல் அண்மையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னெடுக்கப்படும் போலி அச்சுறுத்தலுக்கு அஞ்சவேண்டாம் என ஜப்பானிலிருந்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அறிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, ஊடாக அவசர அறிப்பொன்றை விடுத்து ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அரச அலுவலகங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் என்னால் 2019 ஏப்ரல் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிரூபம் மற்றும் அதன் தொடர்ச்சியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்குறிப்பட்ட இடங்களின் பாதுகாப்பு உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சாதாரண குறிப்பாணைகள் மற்றும் பணிப்புரைகளைக் கொண்ட கடிதங்களையும் சுற்நிரூபங்களையும் மேற்கோள் காட்டி அண்மையில் பயங்கரவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லையென பாதுகாப்பு தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர் ஆகையால் தேவையில்லாத பீதியை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை.

அரச நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் அதியுச்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் பயங்கரவாத அச்சுறுத்தல் அண்மையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னெடுக்கப்படும் போலி அச்சுறுத்தலுக்கு அஞ்சவேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.